தூத்துக்குடியில் புதன்கிழமை 2-வது நாளாக என்.டி.பி.எல். ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


தூத்துக்குடியில் புதன்கிழமை 2-வது நாளாக என்.டி.பி.எல். ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x

தூத்துக்குடியில் புதன்கிழமை 2-வது நாளாக என்.டி.பி.எல். ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் புதன்கிழமை 2-வது நாளாக என்.டி.பி.எல். ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

காத்திருப்பு போராட்டம்

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின்நிலைய தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் என்.டி.பி.எல். அனல்மின்நிலைய ஒப்பந்த ஊழியருக்கு என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர் சம்பளத்தை வழங்க வேண்டும், கொரோனா பேரிடர் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் 6 நாட்கள் பணி புரிந்தால் ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தரமான குடிநீர் வசதி, கேண்டீன் வசதி, உணவு அருந்தும் அறை, பெண்களுக்கு பணியிடத்தின் அருகே கழிவறை, போதுமான இடவசதியுடன் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் அமைக்க வேண்டும், பணியிடத்தில் முதலுதவி பெட்டி வைக்க வேண்டும், வளாகத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக அனல்மின்நிலையம் முன்பு சங்க செயலாளர் எஸ்.அப்பாத்துரை தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

பேச்சுவார்த்தை

இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் வைத்து தாசில்தார் செல்வக்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் என்.டி.பி.எல். நிறுவன மனிதவள மேம்பாட்டு பொது மேலாளர் சுப்பிரமணியன், இணை பொது மேலாளர் செல்வம்ஜேக்கப், ஜவகர், என்.டி.பி.எல். சங்க செயலாளர் அப்பாத்துரை, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரசல், தலைவர் பேச்சிமுத்து, தூத்துக்குடி அனல்மின்நிலைய செயலாளர் கணபதி சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில், ஏற்கனவே தொழிலாளர் துறை இணை ஆணையர் வழங்கிய சம வேலைக்கு சம ஊதியம் தீர்ப்பில் சென்னை ஐகோர்ட்டு வழங்கும் மேல்முறையீட்டு தீர்ப்பை ஏற்றுக் கொள்வது, கொரானா ஊரடங்கு காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் மண்டல இணை ஆணையர் சமரசப் பேச்சு வார்த்தையின் படி வேலைக்கு சேர்க்கப்படுவார்கள், சட்டப்பிடி இ.பி.எப் பிடித்தம் செய்யப்படும், மிகைநேர பணி செய்யும் சூப்பிரவைசர்களுக்கு ஊதியத்துடன் பணப்பயன் வழங்கப்படும், முதலுதவி வசதிகள் கூடுதலாக செய்யப்படும். பிரதி மாதம் 10-ந் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story