புதிய ஓய்வூதிய ஒழிப்பு இயக்கத்தினர் தொடர் போராட்டம்


புதிய ஓய்வூதிய ஒழிப்பு இயக்கத்தினர் தொடர் போராட்டம்
x
சேலம்

புதிய ஓய்வூதிய ஒழிப்பு இயக்கம் சார்பில் சேலம் நாட்டாண்மை கட்டிடம் முன்பு தொடர் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமாயி தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் மனோகர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் விஜயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

இதில் புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறும் போது கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறோம். தற்போது 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் தொடங்கி உள்ளோம். அதன்படி இந்த போராட்டம் நாளை (இன்று) காலை 10 மணி வரை தொடர்ந்து நடைபெறும் என்று கூறினர்.


Next Story