உசிலம்பட்டி அருகே கட்டப்பட்ட 2 நாளில் கனமழைக்கு அரசுப்பள்ளி புதிய சுற்றுச்சுவர் இடிந்தது

உசிலம்பட்டி அருகே கட்டப்பட்ட 2 நாளில் கனமழைக்கு அரசுப்பள்ளி புதிய சுற்றுச்சுவர் இடிந்தது
x

உசிலம்பட்டி அருகே கட்டப்பட்ட 2 நாளில் கனமழைக்கு அரசுப்பள்ளி புதிய சுற்றுச்சுவர் இடிந்தது

மதுரை

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே உள்ளது வாலாந்தூர். இங்கு உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 10 அடிக்கு ஒரு தூண் என 30-க்கும் மேற்பட்ட தூண் அமைத்து 10 அடி உயரத்திற்கு இந்த சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. கட்டப்பட்ட 2 நாளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நேற்று காலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. பள்ளி விடுமுறை என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story