புதிதாக உதயமானவாணாபுரம் தாலுகா தாசில்தாராக குமரன் பொறுப்பேற்புதுணைதாசில்தார்களும் பொறுப்பேற்றனர்
புதிதாக உதயமான வாணாபுரம் தாலுகா தாசில்தாராக குமரன் பொறுப்பேற்றாா். அவருடன் துணைதாசில்தார்களும் பொறுப்பேற்றனர்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சங்கராபுரம் தாலுகாவை இரண்டாக பிரித்து, அதில் வாணாபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கி அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வாணாபுரம் தாலுகாவை தொடங்கி வைத்தார். தற்போது, தாலுகா அலுவலகமானது வாணாபுரத்தில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார சேவை மைய கட்டடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாணாபுரம் தாலுகா தாசில்தாராக குமரன் நியமிக்கப்பட்டு, அவர் நேற்று முதல் பொறுப்பேற்று கொண்டார். அவருடன் தலைமையிடத்து துணை தாசில்தாராக சரவணன், மண்டல துணை தாசில்தார்களாக சேகர், கோவிந்தராஜ், தேர்தல் துணை தாசில்தாராக கோபு, வட்ட வழங்கல் அலுவலராக கங்காலட்சுமி ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற தாசில்தார்களை தாலுகாவிற்குட்பட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் சுற்றுப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.