பழனி கோவிலுக்குள் மாற்று மதத்தினர் செல்ல தடை அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க வேண்டும் -ஐகோர்ட்டு


பழனி கோவிலுக்குள் மாற்று மதத்தினர் செல்ல தடை அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க வேண்டும் -ஐகோர்ட்டு
x

பழனி கோவிலுக்குள் மாற்று மதத்தினர் செல்ல தடை அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

பழனி மலை அடிவாரத்தில் கடை நடத்தி வருகிறேன். நாள்தோறும் மலைக்கு மேல் சென்று முருகனை தரிசனம் செய்து வருகிறேன். 1947-ம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்து கோவில் நுழைவு அங்கீகாரச்சட்டத்தின்படி இந்து கோவில்களுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழையக்கூடாது. 1970-ம் ஆண்டில் இதுதொடர்பான சட்டப்பிரிவு மட்டும் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அதன்படி இந்து கோவில்களில் இந்துக்கள் மட்டுமே வழிபட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத நபர்களும், மாற்று மதத்தை நம்புகிறவர்களும் கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை.

அறிவிப்பு பலகை

இந்தநிலையில் பழனி தேவஸ்தானம் சார்பில் இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழையத்தடை என்ற அறிவிப்பு பலகை பழனி மலைப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு பலகையை தற்போதைய செயல் அலுவலர் நீக்கி உள்ளார். இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் உள்ளது. தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும்.

இதற்கிடையே இந்து அல்லாதவர்கள் சிலர் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்து உள்ளனர். அதன்பிறகுதான் இந்த அறிவிப்பு பலகை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட முருகன் கோவில் மற்றும் உப கோவில்களில் இந்துக்கள் தவிர மாற்று மதத்தினர் நுழைய தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பான அறிவிப்பு பலகையை மீண்டும் நிறுவ உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

மீண்டும் அமைக்க உத்தரவு

இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை அகற்றியது ஏன்? என கேள்வி எழுப்பினார். பின்னர் அந்த பலகையை ஏற்கனவே இருந்ததைப்போலவே மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.


Next Story