விபத்து சாவு எண்ணிக்கை குறைந்தது


விபத்து சாவு எண்ணிக்கை குறைந்தது
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளால், விபத்து சாவு எண்ணிக்கை குறைந்து உள்ளதாக போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் கூறினார்.

கோயம்புத்தூர்

கோவையில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளால், விபத்து சாவு எண்ணிக்கை குறைந்து உள்ளதாக போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் கூறினார்.

கோவை நகர போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விபத்து தடுப்பு நடவடிக்கை

கோவை நகரில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்கள் குறித்து போலீசார் ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த பகுதி களில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.

அந்த வகையில் பாலக்காடு ரோடு சுகுணாபுரத்தில் இருந்து பொள் ளாச்சி ரோடு ஈச்சனாரி வரை குறுக்கு சாலை குறுக்கிடும் பகுதி களில் 140 இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் அந்த சாலைகளில் கடந்த ஒரு மாதத்தில் விபத்துகள் நடைபெற வில்லை. இதேபோல் சத்தி சாலையிலும் இரும்பு தடுப்புகள் வைக்கப்படுகிறது.

போக்குவரத்து போலீசார் நிறுத்தப் படாமல், ரவுண்டானா மூலம் சீரான போக்குவரத்துக்கு பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சாவு குறைந்தது

சுங்கம் பகுதியில் ரூ.95 லட்சத்தில் ரவுண்டானா பணிகள் விரைவில் முடிவடையும். உக்கடம் அரசு பஸ் டெப்போ அருகில் இருந்து வின்சென்ட் ரோட்டுக்கு செல்லும் பகுதியில் புதிதாக ரவுண்டானா அமைக்கப்படுகிறது.

இதன் மூலம் போக்குவரத்து போலீசார் நிறுத்தாமலேயே சீரான போக்குவரத்து நடைபெறும்.

கடந்த 2022-ம் ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு விபத்து சாவு எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 3 மாதங்களில் கோவையில் 69 பேர் உயிரிழந்தனர்.

இந்த ஆண்டு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு குறைந்துள்ளது.

1,266 வழக்குகள்

இதேபோல் விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. குடி போதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 10 "பிரீத் அனலைசர்" கருவிகள் மூலம் சோதனைகள் நடத்தப்படுகிறது.

கடந்த 3 மாதங்களில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 1,266 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் மேற்கு பகுதியில் 573 வழக்கு, கிழக்கு பகுதியில் 693 வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோர்ட்டு மூலம் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story