வண்டிமலையான் கோவில் கொடை விழா கால்நாட்டுதலுடன் தொடங்கியது


வண்டிமலையான் கோவில் கொடை விழா கால்நாட்டுதலுடன் தொடங்கியது
x

செண்பகராமநல்லூர் வண்டிமலையான் கோவில் கொடை விழா கால்நாட்டுதலுடன் தொடங்கியது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி தாலுகா செண்பகராமநல்லூர் வண்டிமலையான், வண்டிமலைச்சி அம்மன் கோவில் கொடை விழா கால்நாட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் பரப்பாடி அபி ஸ்வீட்ஸ் பேக்கரி அ.வேல்துரை, கோவில் அக்தார் பெருமாள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) மாபெரும் திருவிளக்கு பூஜை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு பரிசுப்பொருட்கள், சேலைகள் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பிரதான கொடைவிழா நடைபெறுகிறது. அன்று காலையில் விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், அம்மன் கும்பம் எடுத்து வீதி உலா வருதல், இரவு ஸ்டார் நைட் எஸ்.ஆர்.சந்திரன் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story