தீக்காயம் அடைந்த அதிகாரியும் சிகிச்சை பலனின்றி சாவு
மனைவியை காப்பாற்ற முயன்றபோது தீக்காயம் அடைந்த அதிகாரியும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருவண்ணாமலை
ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் உள்ள கண்ணப்பன் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 52). ஆரணி தீயணைப்பு நிலைய உதவி அலுவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 48) என்பவர் மண்எண்ணெய் பம்பு ஸ்டவ்வில் சமையல் செய்வதற்காக அடுப்பை பற்றவைக்கும்போது தீ குபீரென ஜெயலட்சுமி சேலையில் பிடித்து பம்பு ஸ்டவ் வெடித்ததாக கூறப்படுகிறது, ஜெயலட்சுமியை சரவணன் காப்பாற்ற முயன்ற போது பலத்த தீ காயங்களோடு உயிருடன் மீட்கப்பட்டார். இதில் ஜெயலட்சுமி கருகிய நிலையில் கீழே சாய்ந்து பரிதாபமாக இறந்தார்.
சரவணன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆரணி நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவி இருவரும் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story