மூதாட்டி மர்ம சாவு


மூதாட்டி மர்ம சாவு
x

மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வீரபோகம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி ராசக்கிளி(வயது 80). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த காயங்களுடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் ராசக்கிளி நேற்று முன்தினம் இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த காட்டகரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன், ராசக்கிளியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மீன்சுருட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து ராசக்கிளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story