முதியவர் சாவு


முதியவர் சாவு
x

முதியவர் சாவு

நாகப்பட்டினம்

நாகூர் புதிய பஸ் நிலையத்தில் முதியவர் ஒருவர் கவலைக்கிடமாக கிடப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற நாகூர் போலீசார் சாலையோரத்தில் கிடந்த முதியவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் முதியவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விசாரணையில் இறந்தவர் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை மேஸ்திரி ரோட்டை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story