கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு
பள்ளிகொண்டா அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
அணைக்கட்டு
பள்ளிகொண்டா அருகே திப்பசமுத்திரம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 62), கூலி தொழிலாளி. இவருக்கு அஞ்சா என்ற மனைவியும், 2 மகள்களும், உள்ளனர். சம்பத் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறிய சம்பத் இரவு வரை வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் அங்குள்ள விவசாய கிணற்றின் கரையில் தேங்காய் மூட்டை மற்றும் துணிகள் இருந்ததை பார்த்து அஞ்சாவிடம் கூறினர்.
மேலும் பள்ளிகொண்டா போலீசாருக்கும், ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் மற்றும் சசிதரன் உள்பட தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி சம்பத் உடலை மீட்டனர்.
பின்னர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், சம்பத் துணிகளை கரை மீது வைத்து விட்டு குளிப்பதற்காக கிணற்றில் இறங்கியுள்ளார். அவர் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தது இறந்திருக்கலாம் என்றனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.