முதியவர் மயங்கி விழுந்து சாவு


முதியவர் மயங்கி விழுந்து சாவு
x

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.

ராணிப்பேட்டை

சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 67). சமையல் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு ரெயிலில் சென்னையில் இருந்து அரக்கோணம் வந்தபோது நள்ளிரவு சுமார் 2.30 மணி அளவில் மயங்கி விழுந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுப்பிரமணியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story