மனு கொடுக்க வந்த முதியவர் திடீர் சாவு


மனு கொடுக்க வந்த முதியவர் திடீர் சாவு
x

மனு கொடுக்க வந்த முதியவர் திடீரென இறந்தார்.

திருச்சி

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகர் மற்றும் புறநகரில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தனர். இந்த நிலையில் துறையூர் ரெங்கநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சாமிநாதன் (வயது 63) என்பவர் நேற்று காலை மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். பின்னர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கிற்கு செல்வதற்காக சாமிநாதன் மெதுவாக நடந்து வந்்தார். அப்போது, அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சாமிநாதனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story