பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
x

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தொடக்கவிழா சங்கராபுரம் தனியார் மண்டபத்தில் மாநில தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சேகர், பொது செயலாளர் டாக்டர்.பார்த்திபன், பொருளாளர் வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் நெடியவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன் மாவட்ட சங்கத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதைத் தொடர்ந்து மாநில பொது செயலாளர் சந்திரகுமார், செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் தொகுப்பூதியம், தற்காலிக, நீண்டகால ஒப்பந்தம், சிறப்பு காலமுறை ஊதியம் ஆகிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், செவிலியர்கள், ஊர்புற நூலகர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் போன்ற ஊழியர்களை காலமுறை ஊதியத்துக்கு மாற்றம் செய்து தர முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்வது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் அனைத்துத்துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story