பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 2 July 2023 12:15 AM IST (Updated: 2 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அதன் தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணன், பொருளாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ராஜாராமன் வரவேற்றார். கூட்டத்தில் 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத உயர்வு அளிப்பதாக தெரிவிக்கப்பட்ட வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும். ஓய்வூதியர்களுக்கு குடும்ப நலநிதி ரூ.80-லிருந்து ரூ.150 ஆக பிடித்தம் செய்யப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story