பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்


பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்
x

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை வேங்கிக்காலில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் 24-வது சங்க அமைப்பு தின நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் மூர்த்தி வரவேற்றார். ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் கே.இளங்கோவன் தொடக்க உரையாற்றினார். முன்னாள் மாவட்ட தலைவர் சாது, தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவல்துறையினர் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவலிங்கம், மாதவ சின்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கொரோனாவை காரணம் காட்டி முடக்கப்பட்ட 21 மாதங்களுக்கான 7-வது ஊதியக்கமிஷன் அகவிலைபடி நிலுவை தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

மத்திய அரசு வழங்கிய பின்னரும் மாநில அரசு வழங்க வேண்டிய 2 தவணை பஞ்சபடியையும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

மாநில செயலாளர் சிவகங்கை முத்துராமலிங்கம் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் பழனி நன்றி கூறினார்.


Next Story