பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற விழாவில் வலியுறுத்தல்


பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்  தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற விழாவில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 July 2022 8:44 PM IST (Updated: 2 July 2022 8:44 PM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற விழாவில் வலியுறுத்தப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் புதிய உறுப்பினர்கள் இணைப்பு, புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு ஆகிய முப்பெரும் விழா பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதற்கு பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய தலைவர் வீரக்குமாரசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தினகரன் முன்னிலை வகித்தார்.

முன்னதாக ஒன்றிய பொருளாளர் பழனிசாமி வரவேற்று பேசினார். மாநில துணை தலைவர் டெஸ்மா சிவக்குமார் கலந்துகொண்டு பேசினார். விழாவில் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story