பழையாறு மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை


பழையாறு மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2 Feb 2023 6:46 PM GMT)

கடல்சீற்றம் காரணமாக பழையாறு மீனவர்கள் நேற்று 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கடல்சீற்றம் காரணமாக பழையாறு மீனவர்கள் நேற்று 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் மூலம் 350 விசை படகுகள், 400 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் தினமும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாகவும், கடல் சீற்றம் காரணமாகவும் மீன்வள துறையின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 3 நாட்களாக 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் பழையாறு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை.

இதேபோல் கடல் சீற்றம் காரணமாக கொடியம்பாளையம், மடவாமேடு, கொட்டாய்மேடு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட கிராம பகுதிகளைச்சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்திலும், துறைமுகத்திலும் நிறுத்தி வைத்துள்ளனர்.


Next Story