மகளிர் உரிமைத்தொகைக்கு பதிவுசெய்ய வந்த மூதாட்டி மயங்கி விழுந்தார்
கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு பதிவுசெய்ய வந்த மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்
மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்கிற தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, கே.வி.குப்பம் தாலுகா அலுவலக இ-சேவை மையத்தில் மறுவிண்ணப்பம் செய்ய ஆண்கள் பெண்கள் என நூற்றுக் கணக்கானோர் திடீர் எனத் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு மூதாட்டி திடீர் என்று மயங்கி விழுந்தார். அவருக்கு அங்கிருந்தவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்தனர்.
அவர் லத்தேரி அடுத்த காளாம்பட்டு மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம் மனைவி ராமு (வயது 67) என்பது அவர் வைத்திருந்த ஆதார் அட்டை மூலம் தெரியவந்தது. நேற்று மட்டும் 285 பேர் மறு பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story