படைப்பத்து மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் தொடக்கம்


படைப்பத்து மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் தொடக்கம்
x

அரியலூர் படைப்பத்து மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் தொடங்கின.

அரியலூர்

அரியலூர் மேலத்தெருவில் பிரசித்தி பெற்ற படைப்பத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் நேற்று தொடங்கியது. இதைெயாட்டி யாகசாலை பூஜை நடத்தப்பட்டு மூலவர் சன்னதியில் திரையிடப்பட்டது. கோவிலில் உள்ள ராஜகோபுரம் மற்றும் சுற்று பிரகாரங்களில் உள்ள முருகன், விநாயகர், சிவலிங்கம் உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் மண்டபங்கள் கட்டப்பட்டு பொதுமக்களின் பங்களிப்புடன் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விரைவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என்று விழா குழுவினர் தெரிவித்தனர்.


Next Story