டீக்கடை உரிமையாளர் தவறி விழுந்து பலி
கரூரில், வீட்டில் பழுதான மின்விசிறியை கழற்றியபோது டீக்கடை உரிமையாளர் தவறி விழுந்து பலியானார்.
கரூர்
கரூர் எல்.ஜி.பி. நகரை சேர்ந்தவர் வல்லவன் (வயது 37). இவருக்கு திருமணமாகி செல்வி (29) என்ற மனைவி உள்ளார். வல்லவன் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் மேற்கூரையில் உள்ள மின்விசிறி பழுதாகி ஓடாமல் இருந்துள்ளதுஇதனால் மின்விசிறியை மேலே இருந்து கழற்றி உள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த வல்லவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார்.இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வல்லவன் பரிதாபமாக இறந்தார் இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story