மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தேசிய கொடியை வரைந்த ஊராட்சி தலைவர்


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தேசிய கொடியை வரைந்த ஊராட்சி தலைவர்
x
தினத்தந்தி 30 Jun 2023 6:45 PM GMT (Updated: 2 July 2023 11:54 AM GMT)

ஆதிரங்கம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தேசிய கொடியை வரைந்த ஊராட்சி தலைவரை சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

திருவாரூர்

பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள தர்கா தெருவில் கடந்த 2016-ம் ஆண்டு அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி மூலம் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் பெற்று வந்தனர்.

இந்த தொட்டி பழுதடைந்துள்ளதாகவும், அதனை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் தனது சொந்த செலவில் ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்தார்.

ஊராட்சி தலைவருக்கு பாராட்டு

பின்னர் தொட்டியில் யாரும் சினிமா, விளம்பர போஸ்டர்களை ஒட்டாத வகையில் அதில் மூவர்ணங்களால் தேசிய கொடியை வரைந்துள்ளார்.

இந்த செயலை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஊராட்சி மன்ற தலைவரை பாராட்டினர். இந்த செயலுக்கு சமூக வலைதளங்களிலும் பாராட்டு குவிந்து வருகிறது.


Next Story