பஞ்சாயத்துராஜ் சட்டத்தைமுழுமையாக அமல்படுத்த வேண்டும்


பஞ்சாயத்துராஜ் சட்டத்தைமுழுமையாக அமல்படுத்த வேண்டும்
x

பஞ்சாயத்துராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம், செப்.4-

விழுப்புரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் மாவோ தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கோமதிமணி, மகேஷ், தயாளன், பூங்கா பாக்யராஜ், அருணாமுருகன், பத்மநாபன், லட்சுமண ஆனந்த், மலைச்சாமி, ராமச்சந்திரன், சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், சட்டத்திற்க்கு புறம்பாக மறைக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய பங்கு தொகை மாநில நிதிக்குழு மானியம், ஜீரோ பேலன்ஸ் இல்லாமல் 6-வது நிதிக்குழு மானிய அடிப்படையில் மாதந்தோறும் ஊராட்சிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும், நூறு நாள் பணி திட்டத்தில் வேலைகளுக்கான உத்தரவுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வழங்குவதை ரத்து செய்து அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சொர்ணாவூர் ஊராட்சி மன்ற தலைவர் மாகிசிங் நன்றி கூறினார்.


Next Story