குன்னத்தூர் சிறுவர் பூங்காவை சீரமைக்க டெண்டர் விட்டும் வேலை தொடங்காத அவலம்
குன்னத்தூர் சிறுவர் பூங்காவை சீரமைக்க டெண்டர் விட்டும் வேலை தொடங்காத அவலம்
திருப்பூர்
குன்னத்தூர்
குன்னத்தூர் சிறுவர் பூங்கா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது. பூங்கா பழுதடைந்து சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து பாம்புகள் வசிக்கும் பகுதிகளாக உள்ளதாக பலமுறை 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதனால் பஞ்சாயத்து நிர்வாகம் கடந்த பல மாதங்களுக்கு முன் ரூ.18 லட்சத்திற்கு பராமரிப்புக்கு டெண்டர் விடப்பட்டது. டெண்டர் விட்டு பல மாதங்கள் ஆகியும் வேலையை தொடங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். தற்போது அனைத்து சிறுவர் பூங்காக்களும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால் குன்னத்தூர் சிறுவர் பூங்கா மட்டும் பாழடைந்து கிடக்கிறது. ஆகவே உடனடியாக குன்னத்தூர் சிறுவர் பூங்காவை புதுப்பித்து தர வேண்டும் என இப்பகுதி சமூக அலுவலர்களும், பொதுமக்களும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
Related Tags :
Next Story