ஓடை பகுதியில் வசித்த இருளர் இன மக்கள் கயிறு கட்டி மீட்பு


அரக்கோணம் அருகே ஓடை பகுதியில் வசித்த இருளர் இன மக்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.

ராணிப்பேட்டை

மாண்டஸ் புயல்காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அரக்கோணத்தை அடுத்த கணபதிபுரம் கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. அதைத்தொடர்ந்து உபரிநீர் செல்லும் ஓடையின் அருகில் வசிக்கும் இருளர் இன மக்களை முன்னெச்சரிக்கையாக மீட்கும்பணி நடந்தது. அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையிலான வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் அரக்கோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகரன் தலைமையிலான வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கரை ஓரத்தில் இருந்தவர்களை தீயணைப்பு படை வீரர்கள் கயிறு கட்டி பாதுகாப்பாக 25 பேரை மீட்டனர். மேலும் கரையோரம் இருந்த சுமார் 60 பேரை மீட்டு அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாய், போர்வை, மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவைகளை அரக்கோணம் உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகியோர் வழங்கினர்.


Next Story