பஸ்சை அடித்து உடைத்த பொதுமக்கள்
பஸ்சை அடித்து உடைத்த பொதுமக்கள்
தஞ்சாவூர்
கும்பகோணத்திலிருந்து ஆவூர் நோக்கி ஒரு தனியார் பஸ் சென்று வருவது வழக்கம். நேற்று மதியம் 2 மணி அளவில் இந்த பஸ் கும்பகோணத்திலிருந்து ஆவூர் செல்லும் போது சோழன் மாளிகை அருகே விபத்து ஏற்பட்டது. இதில் சில சிறுவர்கள் காயம் அடைந்தனர். இதனால் அங்கிருந்து பஸ்சை ஓட்டி வந்த டிரைவரும், கண்டக்டரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த சிறுவர்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சை அடித்து உடைத்தனர். இதில் பஸ் சேதமடைந்தது. இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story