வாலிபரிடம் தகராறில் ஈடுபட்டவர் கைது


வாலிபரிடம் தகராறில் ஈடுபட்டவர் கைது
x

வாலிபரிடம் தகராறில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

புகழூர் ஹைஸ்கூல் மேடு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 36). இவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மகன் அஜய் (19), வினோத்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து வினோத்குமார் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து, அஜய்யை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story