தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது


தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
x

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தொடர் திருட்டி ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்தை மீட்டனர

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தொடர் திருட்டி ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்தை மீட்டனர்.

தொடர் திருட்டு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள சூப்பர் மார்க்கெட், பிரபல ஜவுளிக்கடை மற்றும் ஆலத்தம்பாடியில் உள்ள ஒரு கடை, திருவாரூர், நன்னிலம், பகுதிகளும் சூப்பர் மார்க்கெட், ஜவுளிக்கடைகளில் தொடர் திருட்டு நடைபெற்று வந்தது.

திருட்டு நடந்த கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் டவுசர் அணிந்த நபர் முகத்தில் துண்டை கட்டிக்கொண்டு திருட்டில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது. அனைத்து திருட்டிலும் இதே போன்ற நபர் தான் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

தனிப்படை அமைப்பு

இதை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பி.ஆர்.புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 40) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், திருவாரூர், நாகை, தஞ்சை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது .

ரூ.2 லட்சத்து 12 ஆயிரம் மீட்பு

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ. 2 லட்சத்து 15 ஆயிரத்தை மீட்டனர்.

இவர் மீது திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

போலீசாருக்கு பாராட்டு

துரிதமாக செயல்பட்டு திருடனை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பாராட்டினார்.


Next Story