தனியார் நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது
தனியார் நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது
கோயம்புத்தூர்
கோவை
கோவை கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்தவர் முகமத் யூனிஸ் (வயது 50). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது சகோதரி மகளுக்கு, மணமகன் தேடி வந்தார். அப்போது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தரகர் ஒருவர், கோவை ஐந்துமுக்கு வீதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் நாசர் (33) என்பவரின் புகைப்படத்தை கொடுத்தார். இது பற்றி முகமத்யூனிஸ் விசாரித்த போது நாசருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரிய வந்தது. எனவே அந்த நாசரை முகமத்யூனிஸ் நிராகரித்து உள்ளார்.
இதை அறிந்த நாசர், முகமத் யூனிசிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் மரக்கடை என்.எச். ரோட்டில் முகமத் யூனிஸ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாசர், முகமத் யூனிசிடம் தகராறு செய்து தாக்கி கெதாலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் வெறைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நாசரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story