புவனகிரி அருகேதொழிலாளியை தாக்கியவர் கைது


புவனகிரி அருகேதொழிலாளியை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புவனகிரி அருகே தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்


புவனகிரி,

புவனகிரி அருகே உள்ள கஸ்பா ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் இந்திரஜித் (வயது 50). கூலி தொழிலாளியான இவருக்கும் அதேஊரை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்திரஜித் வெளியூரில் தங்கியிருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இந்திரஜித் தனது சொந்த ஊரான கஸ்பா ஆலம்பாடி கிராமத்திற்கு நேற்று வந்துள்ளார். இதையறிந்த அதேஊரை சேர்ந்த ராமானுஜம் மகன் பாண்டியன், கோவிந்தராஜ் மகன் செல்வம், கோவிந்தராஜ் மகன் செந்தில்குமார், தேவராஜன் மகன் ராம்குமார், தேவராஜன் மகன் மருதுபாண்டியன், கொளஞ்சி மகன் பாஸ்கர் ஆகிய 6 பேரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக இந்திரஜித்தை ஆபாசமாக திட்டி இரும்பு குழாயால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இந்திரஜித் மருதூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் செல்வம், செந்தில்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிந்து, பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story