தொழிலாளியை தாக்கியவர் கைது


தொழிலாளியை தாக்கியவர் கைது
x

தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த ெதாழிலாளி வினோத்குமார் (வயது 31) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராகவன் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று கடைக்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு வினோத்குமார் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே நின்று கொண்டிருந்த ராகவன் அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (55), அவரது மகன் குரு (18) ஆகிய 3 பேரும் சேர்ந்து வினோத்குமாரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த வினோத்குமார் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்த புகாரின் ேபரில் வழக்குப்பதிந்து சந்திரசேகரை குளித்தலை ேபாலீசார் கைது ெசய்தனா். ராகவன், குருவை தேடி வருகின்றனர்.


Next Story