தொழிலாளியை தாக்கியவர் கைது
சாத்தான்குளம் அருகே தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தை சேர்ந்தவர் வெள்ளக்கண் மகன் பெரியசாமி லிங்கம் (வயது 31). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சின்னமாடன் குடியிருப்பு பாட்டகரை பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சின்னமாடன் குடியிருப்பை சேர்ந்த துரைசாமி என்ற அய்யாக்கண்ணு (50), பெரியசாமி லிங்கத்திடம் அங்கு ஆடு மேய்க்கக்கூடாது என்று கூறி உள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த துரைசாமி, பெரியசாமி லிங்கத்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பெரியசாமி லிங்கம் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் வழக்குப்பதிவு செய்து துரைசாமியை கைது செய்தார்.