கவுன்சிலரை தாக்கியவர் கைது
கவுன்சிலரை தாக்கியவர் கைது
கும்பகோணம்
கும்பகோணம் அருகே உள்ள வாளாபுரம் கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் சுமதிசுந்தரராஜன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலக கண்காணிப்பாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பேசிக்கொண்டிருந்த போது, அந்த பகுதியை சேர்ந்த மதியழகன் (வயது45) என்பவர் அனைத்து தீர்மானங்களையும் எழுத்துப்பூர்வமாக கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது 1-வது வார்டு கவுன்சிலர் துளசிபாஸ்கர், மதியழகனிடம் அமைதியாக இருக்கும் படி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மதியழகன், துளசி பாஸ்கரை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து துளசிபாஸ்கர் கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார், மதியழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.