கார் கண்ணாடியை உடைத்தவர் கைது


கார் கண்ணாடியை உடைத்தவர் கைது
x

வீரவநல்லூரில் கார் கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த சரவணன் (வயது 42) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரம்மநாயகம் (38) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இதனை மனதில் கொண்டு பிரம்மநாயகம், சரவணன் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடிகளை உடைத்தும், சரவணனை அவதூறாக பேசியும் மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வீரவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் வழக்குப்பதிவு செய்து பிரம்மநாயகத்தை கைது செய்தார்.


Next Story