அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
திருக்காட்டுப்பள்ளி அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்
திருக்காட்டுப்பள்ளி:
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கல்லணைக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் செய்யாமங்கலம் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டது. பின்னர் மீண்டும் புறப்பட்ட போது, செய்யாமங்கலத்தைச் சேர்ந்த சஞ்சீவி (வயது32) என்பவர் பஸ்சை வழிமறித்து அதன் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். இதுகுறித்து அரசு பஸ் கண்டக்டர் திருஞானசம்பந்தம் (53) தோகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் தோகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அய்யாப்பிள்ளை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் கண்ணாடியை உடைத்த சஞ்சீவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story