மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியவர் கைது


மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியவர் கைது
x

மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

குளித்தலை அருகே கண்டியூர் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 40). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளை கண்டியூர் மங்கம்மா சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு அவர் சென்று பார்த்தபோது, மங்கம்மா சாலை பகுதியை சேர்ந்த இளையராஜா(42) என்பவர் சரவணனின் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் மீது அரிவாளால் கொத்திக் கொண்டிருந்துள்ளார். இதுகுறித்து கேட்ட அவரை இளையராஜா வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது ஊர் முக்கியஸ்தர்கள் அங்கு வருவதை பார்த்த இளையராஜா, மோட்டார் சைக்கிளை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து சரவணன் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் இளையராஜா மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.


Next Story