ரூ.15.63 லட்சம் மோசடி செய்தவர் கைது


ரூ.15.63 லட்சம் மோசடி செய்தவர் கைது
x

கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.15.63 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பொட்டல்குளத்தை சேர்ந்தவர் திருத்தணிகைவேல் என்ற கார்த்திகேயன் (வயது 52). இவர் சென்னை தலைமை செயலகத்தில் வேலை செய்வதாகவும் மத்திய அரசின் மூலம் ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கி தருவதாகவும் கூறி, அம்பையை சேர்ந்த முருகேசன் மற்றும் 2 பேரை ஏமாற்றி முன்பணமாக ரூ.15 லட்சத்து 63 ஆயிரத்தை பெற்று மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முருகேசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனு மீது மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ரகு உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து திருத்தணிகைவேல் என்ற கார்த்திகேயனை கைது செய்தார்.


Next Story