மருந்து என நினைத்து பூச்சி மருந்தை குடித்தவர் பலி


மருந்து என நினைத்து பூச்சி மருந்தை குடித்தவர் பலி
x
திருவண்ணாமலை

வந்தவாசி

மருந்து என நினைத்து பூச்சி மருந்தை குடித்தவர் பலியானார்.

வந்தவாசியை அடுத்த அளத்துறை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 40). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஸ்ரீதர் கடந்த 2 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று ஸ்ரீதர் மருந்து என நினைத்து வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் இறந்து விட்டார். சம்பவம் குறித்து அவரது தாயார் கிருஷ்ணவேணி கீழ்கொடுங்கலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story