மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது


மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே மதுபானம் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

ஜெயமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜெயமங்கலம் நால்ரோடு பிரிவு அருகே கையில் சாக்குப்பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து பையை சோதனை செய்தனர். அதில் 48 மதுபாட்டில்கள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் எழுவனம்பட்டியை சேர்ந்த சண்முகம் (வயது 47) என்பதும், டாஸ்மாக் கடையில் மொத்தமாக வாங்கி சில்லறையில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story