லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தவர் கைது


லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தவர் கைது
x

லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலசெவல் கல்மடம் அருகே சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டு இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து இருந்ததும், அவர் அதே பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் முருகன் (வயது 44) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story