3,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
3,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறையின் சார்பில் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி, மகேந்திரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் இணைந்து காந்திகிராம பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காந்திகிராமம் சிவாஜி நகரில் ஒரு வீட்டின் முன்பு பதுக்கி வைத்திருந்த 3,500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரேஷன் அரிசி பதுக்கியதாக கரூர் ராமானுரை சேர்ந்த தினேஷ் என்பவரை கைது செய்து கரூர் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story