800 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது


800 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
x

நெல்லை மேலப்பாளையத்தில் 800 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று மேலப்பாளையம் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மேலப்பாளையம் ராஜாநகரை சேர்ந்த பழனிகுமார் (வயது 34) என்பவர் அமிர்தா நகரில் ஒரு காலி இடத்தில் சுமார் 800 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story