காகம், கீரிகளை வேட்டையாடியவர் கைது
காகம், கீரிகளை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார்.
பேரணாம்பட்டு
காகம், கீரிகளை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார்.
பேரணாம்பட்டு வனசரகர் சதீஷ்குமார் தலைமையில் வனவர் சரவணன், வனக்காப்பாளர் முனிசாமி மற்றும் வனத்துறையினர் நேற்று மதியம் பேரணாம்பட்டு அருகே மெரசப் பல்லி கிராமம் பனந்தோப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற ஒரு நபரை பிடித்தது சோதனையிட்டனர். அந்த பையில் 3 கீரீப் பிள்ளைகள், கள்ளிக்காக்கா என அழைக்கப்படும் ஒரு வகை காகம் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் குடியாத்தம் அருகே உள்ள பாக்கம் கிராமம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 22) என்பதும் பல்லல குப்பம் காப்புக் காட்டில் சுருக்கு கம்பி மூலம் இவற்றை வேட்டையாடியது தெரியவந்தது.
இதனையடுத்து வனத்துறையினர் சின்னத்தம்பியை கைது செய்து அவர் வேட்டையாடுவதற்கு சென்று திரும்பிய மோட்டார் சைக்கி, சுருக்குக்கம்பி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் சின்னதம்பியை குடியாத்தம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.