பஸ் நிறுத்தத்தில் மயங்கி கிடந்தவர் சாவு
பஸ் நிறுத்தத்தில் மயங்கி கிடந்தவர் திடீரென இறந்தார்.
விருதுநகர்
விருதுநகர்-மதுரை ரோட்டில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த சின்னமூப்பன்பட்டி கிராம நிர்வாக அதிகாரி செல்வி, அவரை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி செல்வி கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story