போலிநகையை அடகு வைத்தவர் கைது
போலிநகையை அடகு வைத்தவர் கைது செய்யப்பட்டார்.
சாயல்குடி
சாயல்குடி அருகே வெள்ளம்பல் கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன்(வயது 33). இவர் சாயல்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி 106 கிராம் போலி நகையை வைத்து ரூ.4 லட்சத்து 36 ஆயிரம் கடனாக பெற்றாராம். அந்த நகைகளை ஆடிட்டர் ஆய்வு செய்த போது முனீஸ்வரன் பெயரில் உள்ள நகைகள் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தனியார் நிறுவன கிளை மேலாளர் ராஜேஷ் குமார் சாயல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire