சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ பதிவிட்டவர் கைது


சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ பதிவிட்டவர் கைது
x

நெல்லை அருகே சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் வடக்கு தெருவை சேர்ந்த முருகன் என்ற முருகக்குட்டி (வயது 23). இவர் இருதரப்பினருக்கிடையே பிரச்சினையை தூண்டும் வகையில் அவதூறு வீடியோவை சமூகல வலைதளங்களில் பதிவு செய்து பரப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, முருகனை நேற்று கைது செய்தார்.

நெல்லை மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.


Next Story