பெண்ணை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டவர் சிக்கினார்


பெண்ணை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டவர் சிக்கினார்
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாலிபருடன் ஏற்பட்ட பகைக்கு பழிதீர்க்க அவருடைய மனைவியை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

வாலிபருடன் ஏற்பட்ட பகைக்கு பழிதீர்க்க அவருடைய மனைவியை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து கோவை மாவட்ட சைபர்கிரைம் போலீசார் கூறியதாவது:-

முன்விரோதம்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது33). இவர் கோர்ட்டு ஊழியர் பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். ஆனால் அவர் இன்னும் பணியில் சேர வில்லை என்று தெரிகிறது.

இவர் தனது சொந்த ஊரில் ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டு இருந்தார். அப்போது வாலிபர் ஒருவருடன் அவருக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டனர். அதை மனதில் வைத்திருந்த ராஜா, அந்த வாலிபரை பழிவாங்க திட்டமிட்டு காத்திருந்தார்.

ஆபாச படம்

இந்தநிலையில் அந்த வாலிபருக்கு திருமணமாகி கோவையில் மனைவியுடன் வசித்து வருகிறார். அவருடைய மனைவி கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஊழியராக வேைல பார்த்து வருகிறார்.

இதை அறிந்த ராஜா, அந்த வாலிபரை பழிவாங்க திட்டமிட்டார். இதற்காக அவர், அந்த வாலிபரின் மனைவியின் புகைப் படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டார். மேலும் அதில், அந்த பெண்ணின் செல்போன் எண்ணை பதிவிட்டு, அதில் தொடர்பு கொண்டால் உல்லாசமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது.

கைது

இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர், தனது மனை வியுடன் சென்று கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ் ணன் வழக்குப்பதிவு செய்து, பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட ராஜாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story