ஊராட்சி மன்ற தலைவியை மிரட்டியவர் கைது
ராமநாதபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவியை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தை சேர்ந்தவர் சேகு மனைவி அக்பர்ஜான்பீவி (வயது 57). இவர் பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த அசன்பிள்ளை மகன் செய்யது மீராசா (47) என்பவர் அலுவலகத்திற்கு வந்து அக்பர்ஜான்பீவியிடம் மனு ஒன்றை கொடுத்து விட்டு மற்றொரு பேப்பரை கொடுத்து அதில் ஊராட்சி முத்திரை வைத்து தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்தபோது அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அக்பர்ஜான்பீவி அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து செய்யது மீராசாவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story