பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
சேலம்
சூரமங்கலம்
சேலம் பெரமனூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த உமாராணி மகள் சரண்யா. இவர், திருச்சியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தில் சூப்பிரண்டாக உள்ளார். சரண்யாவுக்கும், கன்னங்குறிச்சி சக்திநகர் பகுதியை சேர்ந்த அருள் ஆனந்த் (41) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆண் குழந்தைகள் உள்ளன. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அருள் ஆனந்திடம் இருந்து சரண்யா விவாகரத்து பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அருள் ஆனந்த், உமாராணியின் வீட்டுக்கு வந்தார், பின்னர் உமாராணியிடம் தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள் ஆனந்தை கைது செய்தனர்.
Related Tags :
Next Story