நீதிமன்ற ஊழியருக்கு கொைல மிரட்டல் விடுத்தவர் கைது
நீதிமன்ற ஊழியருக்கு கொைல மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் கணேசன் (வயது28). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னார்வ பணியாளராக உள்ளார். சட்டபணிகள் ஆணைக்குழுவில் மம்சாபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (56) என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி இருதயராணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை பாலசுப்பிரமணியம் செல்போனில் படம் பிடித்தார். அதை கணேசன் கண்டித்ததால் பாலசுப்பிரமணியம் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கணேசன் அளித்த புகாரில் அரசு அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர்.
Related Tags :
Next Story